பிரஜன் நடிப்பில் ஒரு பேயின் காதல் கதையாக உருவாகும் ‘எங்கேயும் நான் இருப்பேன்’

பிரஜன், சுரேஷ் கதாநாயகர்களாக நடிக்கும் எங்கேயும் நான் இருப்பேன்!

செய்திகள் 18-Feb-2017 12:31 PM IST VRC கருத்துக்கள்

பிரஜன், சுரேஷ் இருவர் கதாநாயகர்களாக நடிக்கும் படம் ‘எங்கேயும் நான் இருப்பேன்’. பென்னி தாமஸ் கதை, திரைக்கதை அமைத்து இயக்கும் இப்படத்தில் நாயகியாக ‘இது கதிர்வேலன் காதல் ’படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த கலா கல்யாணி நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக தாஜ் அமீர் நடிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் பென்னி தாமஸ் கூறும்போது, ‘‘காதலுக்காக படு கொலை செய்யப்படும் ஒருவனது ஆவி தனது நண்பனின் உதவியுடன் எப்படி பழி வாங்குகிறது என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதை! அதே நேரம் இப்படம் ஒரு பேயின் காதல் கதையாகவும் இருக்கும்’’ என்றார். இந்த படத்திற்கு அப்சல்யூசுப், ராம் இருவர் இணைந்து இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவை சாலி கவனிக்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் செய்கிறார். லிய ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சென்னியில் நடைபெற்றது.

#EngeyumNaanIrupen #Prajin #Suresh #KalaKalyani #SureshUrs #BennyThomas #EngeyumNaanIrupenMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;