‘காஸி’க்கு குரல் கொடுத்த சூர்யா!

‘காஸி’க்கு குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்!

செய்திகள் 14-Feb-2017 1:41 PM IST VRC கருத்துக்கள்

ராணா, டாப்சி, ஓம்புரி, நாசர், அதுல்குர்கனி, கே.கே.மேனன் முதலானோர் நடித்து, சங்கல்ப் எழுதி இயக்கியுள்ள ‘காஸி’ திரைப்படம் வருகிற 17ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. 1971-ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரில் விசாகப்பட்டிணம் கடல் பகுதியில் நடந்த சில உண்மை சம்பவங்களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இது சரித்திர சம்பவங்கள் அடங்கிய படம் என்பதால் இந்த கதை குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் தரும் விதமாக தமிழில் வெளியாகும் ‘காஸி’க்கு நடிகர் சூர்யாவும், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும், ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் கடலுக்கு அடியில், நீர்முழ்கி கப்பலில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பெங்களூர் டேஸ்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘தோழா’ முதலான படங்களை தயாரித்த ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனமும் ‘மேட்னி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைது தயாரித்துள்ள இப்படத்திற்கு கே. இசை அமைத்துள்ளார். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Suriya #Ghazi #Chiranjeevi #Amithabbachchan #RanaDaggubati #Taapsee #Ompuri #AtulKulkarni #Si3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;