சாந்தனுவுக்கு கை கொடுத்த ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், ‘கலைப்புலி’ எஸ்.தாணு!

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தில் இணைந்த ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், ‘கலைப்புலி’ எஸ்.தாணு!

செய்திகள் 14-Feb-2017 12:14 PM IST VRC கருத்துக்கள்

சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘முப்பரிமாணம்’. இயக்குனர் பாலாவிடடம் உதவியாளராக பணிபுரிந்த அதிரூபன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சாந்தனு நடித்துள்ள இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தனது ‘கபாலி’ பட வெளியீட்டின்போது ‘முப்பரிமாணம்’ படத்தின் டீஸரை ‘கபாலி’யுடன் இணைத்து வெளியிட்டு இப்படக்குழுவினருக்கு ஆதரவு கொடுத்தார். அதைப் போல இந்த படத்தில் இடம் பெறும் புதிய வருடத்தை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பாடல் காட்சியில் ஜாக்கி ஷெராஃப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, வெங்கட் பிரபு, விஜய் ஆண்டனி, பிரசன்னா, பாபி சிம்ஹா, கலையரசன், சூரி, வித்தார்த், ஆரி, பிரேம்ஜி அமரன், அசோக் செல்வன், சங்கீதா கிரிஷ், ஜஸ்வர்யா ராஜேஷ் , ஜனனி ஐயர், பிரித்வி, கிரிஷ், மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சாந்தனு என 27 நடிகர் நடிகைகள் நடனம் ஆடி ‘முப்பரிமாணம்’ படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இந்த பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்து படக்குழுவினரை பாராட்டி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதைப் போல இந்த படத்தின் பாடல்களை வெளியிடும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் சாந்தனு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு உடனே சமத்தித்த ரஜினிகாந்த் படத்தின் பாடல்களையும், டிரைலரையும் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களி தெரிவித்துள்ளார். இது குறித்து சாந்தனு பேசும்போது, ‘‘ரஜினி சார் இந்த படத்தின் டிரைலரை பார்த்ததும் அவரது ஸ்டைலில் கொஞ்ச நேரம் யோசித்தார். சில நிமிடங்கள் கழித்து ‘ஒன்ஸ்மோர்’ என்றார். மீண்டும் டிரைலரை பார்த்த ரஜினி சார், சூப்பராக இருக்கு, இது கண்டிப்பாக வெற்றிப் படம் தான்’’ என்று எங்களை ஆத்மார்த்தமாக வாழ்த்தினார். அந்த தருணம் என்னால் மறக்க முடியாது’’ என்றார்.

சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கேயுடன் ஸ்கந்தா அசோக், தம்பி ராமையா, அப்புக்குட்டி, சாமிநாதன் முதலானோரும் நடித்துள்ள இந்த பாடத்தை ’ஷாமாலயா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி வி.வாசு, பொள்ளாச்சி கோல்ட் வி.குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கும் இப்படம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Shanthanoo #Rajinikanth #Mupparimanam #Athiroopan #Bala #SrustiDonge #Kabali #KalaipuliSThanu #KBhagyaraj #Prabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா டீஸர்


;