‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் மனீஷா யாதவ் திருமணம்!

தனது திருமண விசேஷத்தை சந்தோஷமாக அறிவித்துள்ளார் நடிகை மனீஷா யாதவ்

செய்திகள் 13-Feb-2017 11:12 AM IST Chandru கருத்துக்கள்

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நுழைந்த மனீஷா யாதவ், அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கௌப்பணும் பாண்டியா போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வேறெந்த படத்திலும் நாயகியாக நடிக்காமலிருந்த மனீஷா, கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 28’ 2ஆம் பாகத்தில் ‘சொப்பண சுந்தரி...’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்நிலையில், 7 வருடங்களாக தான் நட்பு கொண்டிருந்த ஒருவருடன் தனக்கு திருமணம் ஆகியிருப்பதாக நடிகை மனீஷா யாதவ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், ‘‘வாழ்க்கையிலேயே மிக சந்தோஷமான நாள். 7 வருட நட்புறவு தற்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகள். எங்களது குடும்பத்திற்குள் நடைபெற்ற இந்த தனிப்பட்ட விசேஷத்தை மீடியாக்கள் புரிந்துகொண்டதற்கு நன்றி. திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கும் நன்றிகள் பல!’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

#ManishaYadav #Vazhakkuen18/9 #TrishaIllanaNayanthara #AadhalalKadhalSeiveer #JannalOram #VenkatPrabhu #chennai28II

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு குப்பைக் கதை - ட்ரைலர்


;