‘கட்டப்பாவை காணோம்’, ‘சத்யா’வை தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் படம்?

விளம்பர பட இயக்குனர் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 9-Feb-2017 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் ‘கட்டப்பாவை காணோம்’, ‘சத்யா’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ அடுத்து இயக்குனர் V.Z.துரையிடம் இணை இயக்குனராக பணியாற்றியவரும், விளம்பர பட இயக்குனருமான வினோத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதிரடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் தலைப்பிடாத இப்படத்தை ‘பாஸ் மூவீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிரார். ராம்ஜீவன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிரார். கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குனர் வினோத் கூறும்போது, ‘‘சமுதாய பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கும் இப்படத்தை சென்னை, பொள்ளாச்சி, காஷ்மீர் என வெவ்வேறு இடங்களில் படமாக்க இருக்கிறோம். இந்த படத்தின் கதைக்களம் மூன்று இடங்களில் பயணித்தாலும் அதை ஒரே புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துவதுதான் இந்த கதையின் சிறப்பு அம்சம். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிபிராஜை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’’ என்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாம்.

#Sibiraj #KattapavaKanoam #NaaigalJaakirathai #JacksonDurai #Sathya #SathyaRaj #Ruben #Ramjeevan #BossMovies #Vinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;