‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரீது வர்மா?

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகியாக ரீது வர்மா ஒப்பந்தம்?

செய்திகள் 8-Feb-2017 12:13 PM IST Chandru கருத்துக்கள்

‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிª படமொன்றிலும் நடித்து வருகிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸரே வெளிவந்தும்கூட படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் இயக்குனர் கௌதம் மேனன் அறிவிக்காமலேயே உள்ளார். ஆனால், மலையாள நடிகை அனு இமானுவேல் விக்ரமிற்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகின. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக தற்போது படத்திலிருந்து அனு இமானுவேல் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனு இமானுவேலுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை ரீது வர்மா ஒப்பந்தப்பம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

‘பெல்லிசூப்புலு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரீது வர்மா, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகர் பார்த்தபனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

#RituVarma #DhruvaNatchathiram #Vikram #Gauthammenon #EscapeArtists #Madhan #HarrisJayaraj #Parthiban

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;