‘சி3’யை வசூல் சாதனை புரிய வைக்கப்போகும் 5 முக்கிய விஷயங்கள்!

‘சி3’யை வசூல் சாதனை புரிய வைக்கப்போகும் 5 முக்கிய விஷயங்கள்!

முன்னோட்டம் 7-Feb-2017 11:28 AM IST Top 10 கருத்துக்கள்

உலகமங்கும் ‘சி3’ வெளியாவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் சில விஷயங்களை இங்கே ‘டாப் 10 சினிமா’ ரசிகர்களுக்காக தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

உண்மைச் சம்பவத்தின் பின்னணி

பொதுவாகவே ஹரி படங்கள் என்றால் முழுக்க முழுக்க கற்பனையில் தோன்றிய பொழுதுபோக்குப் படங்களாகத்தான் இருக்கும். அதற்கு ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’வும் விதிவிலக்கல்ல. ஆனால், தற்போது ஹரி இயக்கியுள்ள இந்த 3ஆம் பாகத்தை, என்டிஆர் ஆட்சி கால்த்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கியிருக்கிறார்களாம். எனவே, நிச்சயமாக வித்தியாசமான ஒரு கதைக்களத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

காதலிக்க நேரமில்லை

கடமைக்கிடையே அவ்வப்போது காதல் என்பதுதான் கடந்த 2 பாகங்களில் ஹீரோ துரை சிங்கத்தின் பணியாக இருந்தது. ஆனால், ‘சி3’யைப் பொறுத்தவரை ரொமான்ஸிற்கெல்லாம் பெரிய வேலையில்லையாம். கடமை.. கடமை என படம் முழுக்க ஆக்ஷன் அதிரடியாகப் பறக்கும் என்கிறது ‘சி3’ படக்குழு. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் படத்திலிருந்தாலும், கதையோடு வரும் சில முக்கிய காட்சிகளுக்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களாம்.

வலுவான புத்திசாலி வில்லன்

’சிங்கம்’ படத்தின் வெற்றிக்கு அதன் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியப் பங்குண்டு. முதல் பாகத்தில் பிரகாஷ் ராஜ், இரண்டாம் பாகத்தில் டேனி சபானி என இரண்டு வில்லன்களுமே ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றனர். அந்த வகையில் ‘சி3’யின் வில்லன் அனூப் சிங் தாகூரும் கண்டிப்பாக ரசிகர்களை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம். வெறும் முரட்டு வில்லனாக மட்டுமில்லாமல், துரைசிங்கத்தின் புத்திசாலி தேடல்களுக்கு சவால் கொடுக்கும் மூளையுள்ள வில்லனாகவும் இருப்பாராம்.

திரைக்கதையோடு பயணிக்கும் பாடல்கள்

ஒரு பொழுதுபோக்கு மசாலா படத்தில், திரைக்கதையில் பாடல்களுக்கு இடமில்லை என்றாலும், அதை வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழ் சினிமா பயணித்து வருகிறது. ஆனால், ‘சி3’யைப் பொறுத்தவரை திரைக்கதையில் தனியாக பாடல்களை புகுத்தாமல், கதைக்கு நடுவே பாடல்களை பயன்படுத்த முடிகின்ற இடத்தில் ஹாரிஸின் பாடல்களை பயன்படுத்தியிருக்கிறாராம் ஹரி. நிச்சயமாக இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.

தொழில்நுட்ப யுக்திகளால் ‘தடதட’க்கும் காட்சிகள்

ஹரி படமொன்றாலே காட்சிகள் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். அதிலும், சிங்கம் மற்றும் சிங்கம் 2வின் காட்சிகளெல்லாம் படு ஸ்பீடாக பயணிக்கும். இதையெல்லாம் விஞ்சும் அளவுக்கு ‘சி3’யின் காட்சிகள் ஜெட் வேகத்தில் பறக்குமாம். குறிப்பாக, முந்தைய பாகங்களைவிட இப்படத்தில் இயக்குனர் ஹரி, அதிகப்படியான தொழில்நுட்ப வசதிகளையும், அதன் யுக்திகளால் திரைக்கதையில் திருப்பங்கள் ஏற்படுவதுபோலவும் இயக்கியுள்ளாராம்.

#Singam3 #Si3 #Suriya #StudioGreen #Anushka #Hari #ShrutiHaasan #KEGnanavelRaja #Soori #Singam3MoviePreview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;