விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இணையும் ‘பக்கா’ புதிய தகவல்கள்!

‘அதிபர்’ படத்தை தயாரித்த டி.சிவக்குமார் தயாரிக்கும் ‘பக்கா’ பட தகவல்கள்!

செய்திகள் 6-Feb-2017 12:12 PM IST VRC கருத்துக்கள்

‘சத்ரியன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘நெருப்புடா’. இந்த படத்தை விக்ரம் பிரபு ‘பக்கா’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது ‘பக்கா’ படம் குறித்த மேலும் பல அதிகாரபூர்வமான புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘அதிபர்’ படத்தை தயாரித்த ‘பென் கண்ஸ்டோரியம்’ டி.சிவக்குமார் ‘பக்கா’ படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணியுடன் சூரி, சதீஷ், ஆனந்த் ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை சரவணன் கவனிக்க, சி.சத்யா இசை அமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கதிர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.எஸ்.சூர்யா இயக்கும் ‘பக்கா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் நடக்கிறது. கிராமத்து பின்னணியில் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையாம் ‘பக்கா’.

#Pakka #VikramPrabhu #NikkiGalrani #Sathriyan #NeruppuDa #Adhibar #ManoBala #Singamuthu #Mayilsamy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;