நிதின் சத்யா, பவர் ஸ்டார் சீனிவாசன் கூட்டணியில் ‘சிரிக்க விடலாமா’

கே.பாக்யராஜ் உதவியாளர் இயக்கும் ‘சிரிக்க விடலாமா’

செய்திகள் 4-Feb-2017 10:26 AM IST VRC கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்ஃபுல் வசனம் ‘தெறிக்க விடலாமா’. சூப்பர் ஹிட்டான இந்த வசனத்தை உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படமாம் இது. இதில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், வி.ஆர்.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, அறிமுக நடிகைகள் சௌமியா, தீபா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜும் நடிக்கிறார். இந்த படத்தை வி.பி.காவியன் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சி.சிவகுமார், கவிகாளி தாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தை தயாரிக்கும் ஜெயக்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்து படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார்.

#SirikkaVidalama #Vedhalam #TherikkaVidalama #NithinSathya #PowerstarSrinivasan #VRVinayak

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;