சமீப நாட்களாக தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதிகள் மாறிக்கொண்டே வருகின்றன. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிலிருந்த வரும் ‘போகன்’ படமும் அந்த பட்டியலில் ஒரு படம்தான். ஒருவழியாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வரும் வியாழக்கிழமை உலகமெங்கும் திரையிடப்படுகிறது ‘போகன்’. இப்படத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கிருக்கும் பல்வேறு விஷயங்களில் 5 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
1. தனி ஒருவன் கூட்டணி
ஜெயம் ரவியும், அர்விந்த் சாமியும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்தின் மீது மீடியா மிகப்பெரிய கவனம் செலுத்தியது. ‘தனி ஒருவன்’ மூலம் வில்லனாய் தன்னை முதல்முறையாக முன்னிறுத்திய அர்விந்த் சாமியின் பங்களிப்பு அப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அதோடு ஜெயம் ரவியின் கேரியரிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘தனி ஒருவன்’. அதனால்தான், ரசிகர்கள் மீதான கவனம் ‘போகன்’ படத்தின் மீது அளவுக்கதிகமாக ஈர்க்கப்பட்டிருக்கிறது.
2. கிளாமர் குயின் ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார் என்றாலே போதும், அப்படத்தின் மீது தனியொரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். காரணம் அவரின் அழகும், கிளாமரும்! குறிப்பாக, ‘போகன்’ படத்தின் ஸ்டில்ஸ், போஸ்டர்ஸ், டீஸர், டிரைலர் என அனைத்திலும் ஹன்சிகா சம்பந்தப்பட்ட விஷுவல்கள் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளன.
3. ரொமான்டிக் ஜோடி!
எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் படங்களைத் தொடர்ந்து ‘போகன்’ மூலம் ஜெயம் ரவியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார் ஹன்ஸிகா. முதல் இரண்டு படங்களிலும் ஜெயம்ரவி, ஹன்சிகாவின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு. இந்த ‘போகன்’ படத்திலும் நிச்சயம் அது தொடரும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு.
4. டி.இமானின் அதிரடி பாடல்கள்
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இமானின் இசை. குறிப்பாக அனிருத் பாடிய ‘டண்டணக்கா....’. இப்படத்திலும் இமான் இசையில், அனிருத் பாடியுள்ள ‘டமாலு டுமீலு...’ பாடல் அதிரிபுதிரி ஹிட். தனது ஆஸ்தான மெலடி ஏரியாவிலும் பெரிதாக ஸ்கோர் செய்திருக்கிறார் இமான். அவரின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. பரபர கதைக்களம்
‘போகன்’ கதை மீதான சர்ச்சை ஒருபுறமிருந்தாலும், உண்மையிலேயே ‘போகன்’ படத்தின் கதை இதுதான் என்பதை எளிதில் யூகிக்க முடியாத அளவுக்கே டீஸரிலும், டிரைலரிலும் சஸ்பென்ஸைத் தொடர்ந்துள்ளது ‘போகன்’ டீம். இப்படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதைக்களம் நிச்சயமாக தமிழ் சினிமாவிற்கு புதியதொரு அனுபவமாகவே இருக்கும். நாம் கேள்விப்பட்டவரை படத்தின் பரபரப்பான திரைக்கதை அமைப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு வரும் அளவிற்கு பரபரப்பாக இருக்குமாம்.
#Bogan #JayamRavi #ArvindSwamy #Hansika #Lakshman #DImman #EngeyumKadhal #BoganMoviePreview
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...