மகா சிவராத்திரி அன்று களமிறங்கும் விஜய் ஆண்டனியின் ‘எமன்’

மகா சிவராத்திரியன்று வெளியாகிறது விஜய் ஆண்டனியின் எமன்!

செய்திகள் 27-Jan-2017 4:15 PM IST VRC கருத்துக்கள்

‘சைத்தான் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எமன்’. ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ‘நான்’ படப் புகழ் ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முதன் முதலாக அரசியல் வாதியாக வேடமேற்று நடிக்க, மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் தியாகராஜன் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘எமன்’ படத்தை மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மகாசிவராத்திரி ஃபிப்ரவரி மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை வருவதால் ஒரு நாள் முன்னதாக ‘எமன்’ 24-ஆம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Yaman #VijayAntony #JeevaShankar #LycaProductions #Naan #Saithan #Salim #Yeman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;