‘பைரவா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘பைரவா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

முன்னோட்டம் 11-Jan-2017 1:22 PM IST Top 10 கருத்துக்கள்

இன்னும் சில மணி நேரங்களில் ‘பைரவா’ படம் உலகளவில் வெளியாகவிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக ‘பைரவா’ திரைப்படம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்படுவது இப்படத்தின் தனிச்சிறப்பு. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ படத்தை பார்க்கத் தூண்டும் பல காரணங்களில் 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.

1. ‘பைரவா’வைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் காரணங்களில் முதல் காரணமாக வேறென்ன இருக்க முடியும்... சந்தேகமேயில்லாமல் ‘இளையதளபதி’ விஜய்க்காகத்தான் ஒட்டுமொத்த கூட்டமும் திரையரங்கை ஆக்ரமிக்கவிருக்கிறது. விஜய்யின் ஸ்கிரீன் பிரசென்ஸ் ஒன்றே போதும் ரசிகர்களை மகிழ்விக்க!

2. கோலிவுட்டின் லேட்டஸ்ட் இளவரசியான கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக விஜய்யுடன் ‘பைரவா’வில் கைகோர்த்துள்ளார். டீஸர், டிரைலர்களில் பெரிதாக அவரின் பங்களிப்பு இல்லையென்றாலும், வெள்ளித்திரையில் அவர் தரிசனத்திற்கு நிச்சயம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும்.

3. விஜயா புரொடக்ஷனின் தாராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘பைரவா’வின் முக்கிய கவனங்களில் ஒன்று அப்படத்தின் செட் வேலைபாடுகள். குறிப்பாக கோயில் செட் ஒன்றில் நடைபெறும் திருவிழா பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சண்டை காட்சிகளுக்காக கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம் போன்ற செட்களும் பெரிய அவளவில் பேசப்படுமாம்.

4. ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக உருவாகிவரும் சந்தோஷ் நாராயணனின் ‘பைரவா’ பாடல்கள் ஏற்கெனவே அதிரி புதிரி ஹிட். குறிப்பாக அருண்ராஜா காமராஜ் பாடியுள்ள ‘வர்லாம் வர்லாம் வா பைரவா....’ பாடலுக்கு தியேட்டர் அதிரப்போவது நிச்சயம்!

5. மைனா, கும்கி, மான் கராத்தே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யுள்ளார். அவரின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், வித்தியாசமான கேமரா கோணங்களும் படத்திற்கு நிச்சயம் பெரிய பலமாக இருக்கும்.

#Bairavaa #Vijay #KeerthySuresh #VijayaProductions #Bharathan #Ilayathalapathy #SanthoshNarayanan #JagapathiBabu #Sathish #BairavaaMoviePreview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;