கங்கை அமரனுக்கு கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருது!

கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு தேர்வான கங்கை அமரன்!

செய்திகள் 10-Jan-2017 11:06 AM IST VRC கருத்துக்கள்

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதில் சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு கேரள அரசு ஆண்டுதோறும் ’ஹரிவராசனம் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவில் சார்பில் வழங்கப்படும் இவ்விருது 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும். இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளரும், பாடகரும், பாடல் ஆசிரியரும், இயக்குனருமான கங்கை அமரன் தேர்வாகியுள்ளார். இந்த விருதை வருகிற 14-ஆம் தேதி சனிக்கிழமை சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சியில் கேரள சுற்றுலா மற்றும் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கங்கை அமரனுக்கு வழங்கவிருக்கிறார். ஏற்கெனவே இந்த விருதை பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை கேரள அரசாங்கம் சார்பில் செய்தி குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

#GangaiAmaran #KeralaAward #Ilayaraja #VenkatPrabhu #PremgiAmaran #HarivarasanamAward #SPB

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி


;