ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். இதே படத்தில்தான் இசையமைப்பாளர் அனிருத்தின் இசைப்பயணமும் துவங்கியது. ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலக அளவில் கவனம்பெற்ற ‘3’ படத்திற்குப் பிறகு ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். அதோடு, சினிமா ஸ்டன்ட் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய ‘சினிமா வீரன்’ என்ற டாக்குமென்ட்ரி படத்தை உருவாக்கி வருவதாகவும் சமீபத்தில் அறிவித்தார். தற்போது, அதனைத் தொடர்ந்து அவர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக்’ போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் ‘தங்க மகன்’ மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை இயக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ். ‘மாரியப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை குக்கூ, ஜோக்கர் புகழ் ராஜு முருகன் எழுதுகிறார். தமிழ், ஆங்கிலம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நேற்று வெளியிட்டார்.
#AishwaryaDhanush #Thangamagan #3 #vairajavai #CinemaVeeran #Mariyappan #Dhanush #Rajinikanth
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...