கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா முதலானோர் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்ட’ படத்தின் டீஸரை கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக நாளை இரவு 8.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். கௌதம் மேனனும், தனுஷும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தை கௌதம் மேனனும், ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ மதனும் இணைந்து தயரிக்கிறார்கள். தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படம் தனுஷின் அடுத்த படமாக வெளியாகும் என்று எதிர்பாரக்கப்படுகிறது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ள ‘கவண்’ படத்தின் பாடல் ஒன்று நாளை ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளியாகவிருக்கிறது. ‘ஹேப்பி நியூ இயர்…’ என்று துவங்கும் இந்த பாடலை நாளை மாலை 7 மணிக்கு வெளியிடுகிறார் தனுஷ்! தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட டீஸர், மற்றும் ‘கவண்’ படப் பாடல் என்று கிறிஸ்துமஸுக்கு டபுள் ட்ரீட் தரவிருக்கிறார் தனுஷ்!
#Dhanush #GauthamVasudevMenon #MeghaAkash #EnnaiNokkiPaayumThotta #Kavan #VijaySethupathi
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...