‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படத்திற்கு முதலில் ‘முடிசூடா மன்னன்’ என்ற டைட்டில் சூட்டியிருந்தார்கள். ஆனால் இப்போது இந்த டைட்டில் மாற்றப்பட்டு ‘சத்ரியன்’ என்று வைத்திருக்கிறார்கள். மறைந்த இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1990-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சத்ரியன்’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு சூட்டி வரும் நிலையில் இப்போது விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு விஜயகாந்த் நடித்த படத்தின் பெயரை தலைப்பாக்கியிருக்கிறாகள். தற்போது அஜித் நடிப்பில் ‘AK57’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் ‘சத்ரியன்’ படத்தையும் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, கெவின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
#SRPrabhakaran #VikramPrabhu #ManjimaMohan #MudiSoodaMannan #Sathriyan #Vijayakanth #Sundarapandian #AK57 #SathyaJothiFilms
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...