‘சிறுத்தை’யை தொடர்ந்து கார்த்தி போலீஸ் வேடமேற்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

நிஜ சம்பவங்களின் அடிப்படையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

செய்திகள் 22-Dec-2016 11:15 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து ‘சதுரங்கவேட்டை’ படப் புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’ விரைவில் வெளியாகவிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.அர்.பிபு தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன் இப்படத்தில் கார்த்தி ஏற்றிருக்கும் போலீஸ் வேடம் வழக்கமான போலீஸ் அதிகாரி மாதிரி இல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். ‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சத்யா கவனிக்கிறார். ஜனவரி முதல் வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

#Karthi #Vinoth #KaatruVeliyidai #Maniratnam #SathurangaVettai #TheeranAdhikaramOndru #DreamWarriorPictures #SRPrabhu #RakulPreetSingh #Siruthai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;