15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜனவரியில் வெளியாகும் சூர்யா படம்!

சூர்யா, ஹரி கூட்டணியின் ‘சிங்கம்-3’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 22-Dec-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. முதலில் ‘சிங்கம்-3’ படத்தை டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன் பிறகு படத்தின் ரிலீஸை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். இந்நிலையில் நாட்டில் நிலவி வந்த பணம் புழக்க பிரச்சனை, முன்னாள் தமிழக முதல்வரின் மரணம், சூறாவளி புயல் காற்றால் ஏறபட்ட பாதிப்பு போன்ற காரணங்களால் ‘சிங்கம்-3’ யின் வெளியிட்டை மீண்டும் தள்ளி வைத்தார்கள். பொங்கலுக்கு ஏராளமான படங்கள் ரிலீஸ் தேதி குறித்துள்ளதால் பொங்கல் கழித்து ‘சிங்கம்-3’யை ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படம் 2001 ஜனவரியில் வெளியானது. அதனை தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து சூர்யா நடித்து ஜனவரியில் வெளியாகும் படம் ‘சிங்கம்-3’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#S3 #Singam3 #Suriya #Hari #Anushka #ShrutiHaasan #StudioGreen #HarrisJayaraj #Naaser #Vijayakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;