சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜயசந்தர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இதற்காக பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது என்று கூறப்படுகிறது. கடைசியில் இயக்குனர் விஜய்சந்தர் ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவியை தனது படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் சாய் பல்லவி தான். ஆனால் அதன் பிறகு மணிரத்னம் கதையில் சில மாற்றங்களை செய்ய, சாய் பல்லவியின் ஹீரோயின் வாய்ப்பு பறிபோனது. இப்போது விக்ரம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் ‘பிரேமம்’ பட மலர் டீச்சரான சாய் பல்லவி!
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...