பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் மிக விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது! படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ஒரு படத்தை பொறுத்தவரையில் அனைவரும் பார்க்க கூடிய படம் என்று ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்து விட்டால் அதுவே படத்திற்கு கிடைக்கும் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டிருப்பதால பார்த்திபன் உட்பட இப்படக்குழுவினர் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் பார்த்திபனுடன் சாந்தனு பாக்யராஜ், பார்வதி நாயர் ஜோடியாக நடிக்க, சத்யா இசை அமைத்துள்ளார்.
#Parthiepan #ShanthanuBhagyaraj #ParvathyNair #CSathya #KodittaIdangalaiNirapuga #KIN #KathaiThiraikathaiVasanamIyakkam
பார்த்திபன் ஒத்த ஆளாய் இயக்கி, தயாரித்து, நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’....
பார்த்திபன் ஒற்ற ஆளாய் நடித்து, இயக்கி, தயாரித்து சென்ற 20-ஆம் தேதி வெளியான படம் ‘ஒத்த செருப்பு...
பார்த்திபன் இயக்கி, தயரித்து, நடித்து சென்ற 20-ஆம் தேதி வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’....