இயக்குனர் இமயம் பாரதிராஜாவும, விதார்த்தும் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சத்தமில்லாமல் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் மம்முட்டி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தின் அனிமேட்டட் போஸ்டர் ஒன்றும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த அனிமேட்டட் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வருகிற 23-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுகிறார். ‘ஸ்ரேயாஸ்ரீ மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘குரங்கு பொம்மை’யில் பாரதிராஜா, விதார்த்துடன் ‘காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்’ முதலான படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன், டெல்னா டேவிஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். அஜனீஷ் லோகநாத் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
#KuranguBommai #Bharathiraja #VijaySethupathi #Vidharath #PLThenappan #Nithilan #AjaneeshLoknath
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...