சசிகுமார், தன்யா நடிப்பில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது ‘பலே வெள்ளையத் தேவா’. பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில், ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்து, டர்புகா சிவா இசையமைத்திருக்கும் இப்படம் பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி என இந்த வருடத்தில் ஏற்கெனவே மூன்று படங்களை களமிறக்கியிருக்கிறார் சசிகுமார். அதோடு சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். வெளிவரவிருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ அவரின் இந்த வருடத்திய 5வது கணக்கு. ஏ சென்டரில் கவனம் பெறாவிட்டாலும் பி அன்ட் சி வசூலை பெருவாரியாக குவித்து வருகின்றன சசிகுமார் படங்கள்.
2. முழு நீள காமெடிப் படங்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் அரிதாகத்தான் வெளிவருகின்றன. அதிலும் ‘பலே வெள்ளையத் தேவா’ சசிகுமாரின் கேரியரிலும் முதல் முழு நீள காமெடிப் படம் என்பதால், நிச்சயமாக என்டர்டெயின்மென்ட்டுக்கு கேரன்டி தரலாம்.
3. சசிகுமாரால் ‘கிடாரி’ மூலம் இசையமைப்பாளராக களமிறக்கப்பட்டவர் நடிகர் ‘டர்புகா’ சிவா. கிடாரியின் கிராமத்து இசை பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவரின் இசையில் உருவாகியிருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’வுக்கும் அதேபோன்றதொரு வரவேற்பு கிடைக்கும் என நம்புவோம்.
4. என்னதான் ஹீரோயிஸம் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும், தன் பட கதாநாயகி கேரக்டர்களில் பெரிய கவனத்தோடு இருப்பார் சசிகுமார். ‘பலே வெள்ளையத் தேவா’வின் அறிமுக நாயகி தன்யாவுக்கும் கண்டிப்பாக முக்கிய கேரக்டர் ஒன்றை படத்தில் உருவாக்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் தன்யா என்பது அவருக்கான கூடுதல் ப்ளஸ்.
5. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை தென்னகத்து கிராமங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் காமெடிப் படமே ‘பலே வெள்ளையத் தேவா’. இப்படத்தின் நகைச்சுவைக்கு கேரண்டி தருகிறார் நடிகை கோவை சரளா. மதுரை, தேனி கதைக்களத்தைக் கொண்ட படங்கள் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்தாகத்தான் இருக்கும் என்ற பெயரை இப்படம் முற்றிலுமாக மாற்றும் என்கிறது படக்குழு.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் இரண்டு படஙக்ளில் நடித்து வருகிறார். இதில் ஒரு...