நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையில் சின்னத்திரைக்கு வரும் ‘மாயா’

சன் டி.வி.யில் கிறிஸ்துமஸ் விருந்து படைக்கவிருக்கும் நயன்தாராவின் ‘மாயா’

செய்திகள் 21-Dec-2016 1:09 PM IST Top 10 கருத்துக்கள்

நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘மாயா’. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியான இப்படம் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. ஹாரர் பட வரிசையில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படத்திற்கு ரான் ஏதன் யோஹான் இசை அமைத்திருந்தார். ஹாலிவுட் தரத்தில் அமைந்திருந்த அவரது இசையும் இப்படத்தில் மிகவும் பேசப்பட்டன! ’மாயா’ படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியுள்ள சன் டி.வி. நிறுவனத்தினர் ‘மாயா’ படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பு செய்யவிருக்கிறார்கள். ஒரு சில படங்கள் வெளியான இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களிலேயே சின்னத்திரைக்கு வந்து விடுவது வழக்கம். ஆனால் ’மாயா’ வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு ஆன நிலையிலேயே சின்னத்திரைக்கு வருகிறது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இடையில் வரும் ஞாயிற்று கிழமையன்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகவிருக்கிறது ‘மாயா’.


#Maya #Nayanthara #Nayan #Aari #PotentialStudios #Christmas #Suntv

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;