‘கத்தி சண்டை’ படத்தின் 5 சிறப்பு அம்சங்கள்!

5 Special features about Vishal’s Kaththi Sandai

கட்டுரை 21-Dec-2016 11:01 AM IST Chandru கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிப்பில் வரும் 23ஆம் தேதி வெளிவரவிருக்கிறது ‘கத்தி சண்டை’. இப்படம் குறித்த 5 சிறப்பு அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு விஷால் படங்கள் எப்போதும் பிடிக்கும். காரணம், அவரின் பெரும்பாலான படங்கள் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ‘கத்தி சண்டை’ படமும் ஆக்ஷன் விரும்பிகளை கவர வாய்ப்புள்ளது. டிரைலரில் இடம்பெற்ற சில அதிரடி சண்டைக்காட்சிகளே இதற்குச் சான்று.

2. இயக்குனர் சுராஜ் படங்கள் என்றால் நிச்சயமாக ஒன்றை எதிர்பார்க்கலாம். அது பொழுதுபோக்கு அம்சங்கள். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, கிளாமர் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதில் வல்லவர். இதனாலேயே சுராஜ் படங்களை பி அன்ட் சி திரையரங்குகள் விரும்பிக்கேட்டு வெளியிட்டு வருகின்றன. இந்த ‘கத்தி சண்டை’ படமும் நிச்சயமாக அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புவோம்.

3. கதாநாயகனாக மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என கடந்த 5 வருடங்களாக அடம்பிடித்து வந்த ‘காமெடி கிங்’ வடிவேலுவை மீண்டும் இப்படத்தில் காமெடியனாக களமிறக்கியிருக்கிறார்கள். நிச்சயமாக இது ‘கத்தி சண்டை’ படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை பன்மடங்காக்கியிருப்பது உண்மை. கூடவே, சூரியும் இருப்பதால் ‘கத்தி சண்டை’ நிச்சயமாக காமெடிச் சண்டையாகவும் இருக்கும்.

4. முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கும் தமன்னாவின் கிளாமர் காட்சிகள் அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அவருக்கான உடையலரங்காரமும், ஒப்பனையும் இப்படத்தில் பெரிதும் பேசப்படும் என்கிறார்கள்.

5. ‘ஜல்லிக்கட்டு’ ஆல்பத்திற்குப் பிறகு ஹிப் ஹாப் தமிழா ஆதியின் செல்வாக்கு, இளைஞர்கள் மத்தியில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அந்த ஈர்ப்பு ‘கத்தி சண்டை’ ஆல்பத்திற்கும் தொடர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இப்படத்தின் ‘நான் கொஞ்சம் கறுப்புதான்...’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;