கருண் நாயருக்கு பாராட்டு தெரிவித்த ‘சென்னை-600028’ டீம்!

சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டி! கருண் நாயருக்கு சென்னை-600028’ படக்குழுவினர் பாராட்டு!

செய்திகள் 21-Dec-2016 11:01 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வெங்கட் பிரபுவின் ‘சென்னை-6000028 இரண்டாவது இன்னிங்ஸ்’. இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சென்னையில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்காக ஆடி மூன்று சதங்களை அடித்து அசத்தி இருக்கும் கருண் நாயரை ‘சென்னை-600028’ பட குழுவினர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு”

‘‘சென்னை-303 கதாநாயகன் கருண் நாயருக்கு எங்கள் ‘சென்னை-600028’ அணியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களையும், போட்டிகளையும் சந்தித்து தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் கருண் நாயர். எங்களின்’ ‘சென்னை-600028’ படத்தின் வெற்றியும் ஏறக்குறைய அவரைப் போல தான் இருக்கின்றது.
மூன்றாவது சதத்தை கருண் நாயர் அடிக்கும்பொழுது, சென்னை சேப்பாக் விளையாட்டு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அதே போல் விநியோகஸ்தர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு கிடைக்கின்ற பாராட்டுகள், எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடரில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை நம் நாட்டிற்கு தேடி தந்த இளம் வீரர்களை எங்கள் அணியின் சார்பில் மனமார பாராட்டுகிறோம்.நம் இந்திய அணியின் அசத்தலான கேப்டன் விராட் கோலி எப்படியோ அதே மாதிரி தான் எங்கள் அணியின் யுவன் ஷங்கர் ராஜாவும். எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் அவருக்கு பக்கபலமாய் செயல்பட்டது மட்டுமின்றி, இந்த பிரம்மாண்ட வெற்றியை ஒரு அணியின் வெற்றியாக உருவாக்கி இருக்கின்றனர். நம் இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் நாயகர்கள். அதுபோல தான் எங்களின் ‘சென்னை 600028’ அணியினரும்.

‘சென்னை-600028 ’ முதல் பாகத்தில் இளம் நடிகர்களாக நடித்த அனைவரும் தற்போது வளர்ந்து விட்டனர். ‘திரையுலகிற்கு ஒரு கதாநாயகர்கள் குழுவையே நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்' என்று மூத்த கலைஞர்கள் சிலர் சொல்வதை கேட்கும்பொழுது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது தான் ‘சென்னை-600028’ எனக்கு தேடி தந்த பெருமை. வர்த்தக உலகில் ஒரு நிலையான வெற்றியை எங்கள் ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ குழுவினர் தழுவி இருக்கின்றது’’ என்று பெருமையுடன் கூறியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;