3, 54321, 24 படங்களை தொடர்ந்து 465!

சிவகார்த்திகேயன், மகாபா ஆனந்த், ரோபோ சங்கர் வரிசையில் அறிமுகமாகும் கார்த்திக் ராஜ்!

செய்திகள் 20-Dec-2016 5:38 PM IST VRC கருத்துக்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆஃபீஸ்’ தொடரில் நடித்த கார்த்திக் ராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ’465’. அறிமுக இயக்குனர் சாய் சத்யம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ராஜுடன் நிரஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘யாசகன்’, ‘சோன்பப்படி’ ஆகிய படங்களில் நடித்த நிரஞ்சனா தமிழில் நடிக்கும் மூறாவது படம் இது. சிவகார்த்திகேயன், மகாபா ஆனந்த், ‘ரோபோ’ சங்கர் ஆகியோர் வரிசையில், ‘465’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகு ம் கார்த்திக் ராஜ் படம் குறித்து கூறும்போது,

‘‘ஹாரர் த்ரில்லர் பட வரிசையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் மிக வித்தியாசமானதாக இருக்கும். அதனால் தான் எனது முதல் படமாக இதில் நடித்தேன். Indian Penal Code-ல் இடம் பெறும் ‘465’ என்ற பிரிவை மையப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதை ’Power of Angel and Positive Energy’ என்ற விஷயத்திற்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால் தான் இப்படத்திற்கு ‘465’ என்று டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் சாய் சத்யம். எண் தலைப்பாக கொண்டு வெளிவந்த 3, 6, 54321, 24 ஆகிய படங்களை தொடர்ந்து ‘465; என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படமும் வெற்றிப்படமாக அமையும் என்பது எங்களது நம்பிக்கை’’ என்றார் கார்த்திக் ராஜ்.

’எல்.பி.எஸ்.ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.எல்.பிரபு கதை எழுதி தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக் ராஜ், நிரஞ்சனாவுடன் மனோபாலா, கிரேன் மனோகர், மகேஸ்வரன், சுரேகா, ஷமீம் மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் பயின்ற மாணவர்களன சஷாங்க் ரவிச்சந்திரன், கேபிபி பேட்டர்சன் இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். ‘ராட்டிணம்’, ‘கோ-2’ ஆகிய படங்களில் பணியாற்றிய பிலிப் ஆர்.சுந்தர் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளர். ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் கலரிஸ்டாக பணிபுரிந்த ஜி.ராஜராஜன் ‘465’ படத்தின் கலரிங் மற்றும் படத்தொகுப்பு வேலைகளை கவனித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SaiLathiyam #LPSFilms #KarthikRaj #Niranjana #ManoBala #SaiSathyam #465MoviePressMeet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

படைவீரன் - ட்ரைலர்


;