23-ஆம் தேதியுடன் முடிவுறும் ‘AK57’

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘AK57’ எண்பது சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது!

செய்திகள் 20-Dec-2016 12:20 PM IST VRC கருத்துக்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘AK57’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. அங்கு நடந்து வரும் படப்பிடிப்பு ஷெட்யூல் வருகிற 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறதாம். இத்துடன் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விடுமாம்1 மீதி 20 சதவிகித படப்பிடிப்பை விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் இப்படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிடு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முதலானோர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

#AjithKumar #AK57 #VivekOberoi #AksharaHaasan #KajalAggarwal #Siva #Vedalam #SathyaJothiFilms #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டீசர்


;