ரஜினியின் ‘மன்னன்’ ரீ-மேக்கில் ராகவா லாரனஸ்?

‘மன்னன்’ ரீ-மேக்கில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ்?

செய்திகள் 20-Dec-2016 11:34 AM IST VRC கருத்துக்கள்

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்து 1992-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மன்னன்’. ‘சிவாஜி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தில் குஷ்பு, கவுடண்டமணி, விசு, பண்டரி பாய் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்திற்காக இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. வசூலில் சாதனை படைத்த இந்த படத்தை இயக்குனர் பி.வாசு மீண்டும் ரீ-மேக் செய்து இயக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சிவலிங்கா’வை இயக்கி வரும் பி.வாசு, இந்த பட வேலைகள் முடிந்ததும் ‘மன்னன்’ ரீ-மேக் வேலைகளை துவங்குவார் என்றும் கூறப்படுகிறது. பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’வில் நடித்து வரும் ராகவா லாரன்ஸே ‘மன்னன்’ ரீமேக்கிலும் ரஜினி நடித்த பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். அதைப் போல பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’வில் நடித்து வரும் வடிவேலுவும் ‘மன்னன்’ ரீ-மேக்கில் கவுண்டமணி நடித்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

#Mannan #Rajinikanth #RaghavaLawrence #VijayaShanthi #SivajiFilms #Khusboo #Goundamani #PVasu #Visu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;