வர்லாம் வா... ‘பைரவா’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பைரவா’ படத்தின் டிராக் லிஸ்ட் வெளியீடு

கட்டுரை 20-Dec-2016 11:00 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகால இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன் மிக முக்கியமானவராக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். அவருடைய ஆல்பத்தில் பெரும்பாலான பாடல்கள் ஹிட் என்பதோடு, அவருக்கென தனி ஸ்டைல் ஒன்றை உருவாக்கி தொடர்ச்சியாக அதிலேயே பயணித்து வருகிறார். குறிப்பாக... ‘கபாலி’யின் ‘நெருப்புடா...’விற்குப் பிறகு சந்தோஷின் கிராஃப் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில், இளையதளபதியுடன் முதல்முறையாக அவர் இணைந்திருக்கும் ‘பைரவா’ படத்தின் பாடல்கள் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. அதன் முன்னோட்டமாக நேற்று ‘பைரவா’ ஆல்பத்தில் என்னென்ன பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்ற டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் உள்ள பாடல்களைப் பற்றிய விவரங்கள்....

1. பட்டைய கௌப்பு...
பாடியவர் : அனந்து
சிறப்புக்குரல் : பென்னி தயாள்
பாடலாசிரியர் : வைரமுத்து

2. நில்லாயோ...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : வைரமுத்து

3. அழகிய சூதன பூவே...
பாடியவர்கள் : விஜய்நரேன், தர்ஷனா கே.டி.
பாடலாசிரியர் : வைரமுத்து

4. பாப்பா... பாப்பா..
பாடியவர்கள் : ‘இளையதளபதி’ விஜய், ப்ரியதர்ஷினி
சிறப்புக்குரல் : அனந்து
பாடலாசிரியர் : வைரமுத்து

5. வர்லாம் வர்லாம் வா...
பாடியவர் : அருண்ராஜா காமராஜ்
ஆங்கில ராப் : ரோஷன் ஜம்ராக்

#Bairavaa #Vijay #KeerthySuresh #SanthoshNarayanan #Bharathan #VijayaProduction #BairavaaTrackList

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;