ராகவா லாரன்ஸ் படத்தில் அனிருத்!

ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’வுக்காக எஸ்.எஸ்.தமன் இசையில் அனிருத் பாடல்!

செய்திகள் 20-Dec-2016 10:51 AM IST VRC கருத்துக்கள்

பி.வாசு இயக்கத்தில் சிவராஜ் குமார் நடித்து வெற்றிபெற்ற கன்னட படம் ’சிவலிங்கா’. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசுவே தமிழில் ரீ-மேக் செய்து இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸுடன் ரித்திகா சிங், வடிவேலு, ஷக்தி ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக எஸ்.எஸ்.தமன் இசையில் அனிருத் ஒரு குத்துப் பாடலை பாடியிருக்கிறார். ‘ரங்கு ரக்கார…’ என்று துவங்கும் இந்த பாடல் ‘வேதாளம்’ படத்திற்காக அனிருது இசை அமைத்து பாடிய ‘ஆலுமா டோலுமா…’ பாடல் மாதிரி ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருக்கிறதாம். தொடர்ந்து குத்துப் பாடல்களை பாடியும், இசை அமைத்தும் வரும் அனிருத்தின் கேரியரில் இப்பாடலும் ஒரு முக்கியமான பாடலாக அமையும் என்கிறார்கள்.

#Anirudh #Shivalinga #Thaman #PVasu #RaghavaLawrance #RitikaSingh #Vadivelu #RangguRakkara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;