விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு!

போக்கிரி, வில்லு, சுறா, காவலன் படங்களை தொடர்ந்து விஜய் 61-லும் இணையும் வடிவேலு!

செய்திகள் 20-Dec-2016 10:34 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து, ஒரு சிறிய இடைவெளியை விட்டு இப்போது மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க துவங்கியுள்ள வடிவேலு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் ‘கத்திசண்டை’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் படம் முழுக்க வரும் காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. கதையில் முக்கியத்துவமுள்ள இது போன்ற பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ள வடிவேலு, அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இது குறித்த தகவலை வடிவேலுவே தெரிவித்தார். விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ முதலன படங்களில் விஜய்யுடன் நடித்துள்ள வடிவேலு மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

#Vadivelu #Kaththisandai #Vijay #Vijay61 #Atlee #Vishal #Pokkiri #Sura #Villu #Kavalan #Sachin #SriThenandalFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NOTA Trailer


;