‘அய்யனார்’ பட இயக்குனரின் அடுத்த படம்?

’பட்டதாரி’ கதாநாயகன், கதாநாயகி மீண்டும் இணையும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறது?’

செய்திகள் 19-Dec-2016 4:05 PM IST VRC கருத்துக்கள்

ஆதி நடிப்பில் வெளியான ‘அய்யனார்’ படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமித்ரன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறது?’. ‘எவர்கிரீன் எண்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.விஜயகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த அபி சரவணன், அதிதி இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள். விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு காமெடி வசனங்களை எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் வசனங்களை எழுதுகிறார். பார்த்திபனின் ‘குடைக்குள் மழை’, பா.விஜய் நடித்த ‘இளைஞன்’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சாலையோரம்’ படத்திற்கு இசை அமைத்த சேதுராஜா இசை அமைக்கிறார்.அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படம் ‘கல்வி தான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்’ என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்படும் படமாம்!

#NaangaVelaikkuPoyittaOoraiYaarPathukkirathu #Ayyanar #Aadhi #SSRajamithran #EvergreenEntertainment #Pattathari #AbiSaravanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;