ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் நிவின் பாலி பட நடிகை!

‘4G’யில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் நிவின் பாலி பட நடிகை!

செய்திகள் 19-Dec-2016 3:26 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் வெங்கட் பக்கர் இயக்கும் படம் ‘4G’. திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகி நடிகை முடிவாகாமல் இருந்தது. இப்போது கதாநாயகி நடிகை முடிவாகி விட்டது. மலையாள நடிகையான காயத்ரி சுரேஷ் ‘4G’யில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ‘ஜம்னா பியாரி’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தவரும், தற்போது நிவின் பாலியுடன் ‘சகாவு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருபவருமான காயத்ரி சுரேஷ் ‘4G’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். ‘4G’யில் நிஷா என்ற பப்ளி கேர்லாக நடிக்கிறாராம் காயத்ரி சுரேஷ்! இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்கவிருக்கிறதாம்.

#GVPrakash #4G #ThirukumaranEntertainment #SureshMenon #Sathish #GayathriSuresh #JamnaPiyari #Nisha #NivinPauly

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;