சந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்தி நடிகை!

சந்தானத்தின் ‘மன்னவன் வந்தானடி’ படத்திற்கு மராத்தி நடிகையை தேர்வு செய்த செல்வராகவன்!

செய்திகள் 19-Dec-2016 2:49 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவனும், சந்தானமும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘மன்னவன் வந்தானடி’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கான ஹீரோயின் வேட்டை நடந்து வந்தது. பல நடிகைகளை பரிசீலனை செய்த இயக்குனர் செல்வராகவன் கடைசியில் மராத்தி நடிகை அதிதி போஹன்கரை சந்தானத்துக்கு ஜோடியாக்கியிருக்கிறார். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘7G ரெயின்போ காலனி’ படத்தை போன்ற ஒரு காதல் கதை இப்படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகியிருக்கும் அதிதி ஸ்டேஜ் ஆர்டிஸ்டாம்! சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளாராம்.

#Santhanam #Selvaraghavan #AaditiPohankar #MannavanVandhaanadi #YuvanShankarRaja #7GRainbowColony

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;