பொங்கல் களத்தில் குதிக்கும் விஜய்சேதுபதியின் புரியாத புதிர்!

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருட பொங்கலுக்கு 7 படங்கள்!

செய்திகள் 19-Dec-2016 12:44 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் தான் வெளியாகும். ஆனால் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் இல்லாத அளவில் 7 திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் ‘பைரவா’ படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே பொங்கல் வெளியீடு என்ற அறிவிப்போடு துவங்கிய படமாகும். இப்போது ’பைரவா’வுடன் ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ்லீ’, அருண் விஜய்யின் ‘குற்றம்-23’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, கலையரசனின் ‘அதே கண்கள்’ ஆகிய படங்களும் பொங்கல் வெளியீடாக வரவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படங்களுடன் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘புரியாத புதிர்’ படமும் பொங்கல் வெளியீடாக களமிறங்கவிருக்கிறது. இதனால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 7 படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் பட்சத்தில் இந்த வருட பொங்கல் ரசிகர்களுக்கு தித்திப்பான பொங்கலாக அமையவிருக்கிறது.

#PuriyathaPuthir #VijaySethupathi #Gayathiri #Bairavaa #Vijay #BruceLee #ArunVijay #Kuttram23 #AdheKangal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;