சசிகுமாருக்கு பாடம் கற்பித்த ‘பலே வெள்ளையத் தேவா’

மதுரை மக்களின் நைய்யாண்டியை சொல்லும் கதை ‘பலே வெள்ளையத் தேவா!

செய்திகள் 19-Dec-2016 12:11 PM IST VRC கருத்துக்கள்

‘கிடாரி’ பட வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வருகிற 23ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் ‘பலே வெள்ளையத் தேவா’. அறிமுக இயக்குனர் பி.சோலை பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமாருடன் முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘கிடாரி’க்கு இசை அமைத்த தர்புகா சிவாவே இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்!
இப்படம் குறித்து இயக்குனர் சோலை பிரகாஷ் கூறும்போது, ‘‘இந்த படத்தை மதுரை, தேனி பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. மதுரை பின்னணி கதை என்றதும் அருவாள், வெட்டு, குத்து கொலை சம்பந்தமான கதை என்று யாரும் நினைக்க வேண்டாம்! இந்த படத்தில் மதுரை மக்களின் நைய்யாண்டியை சொல்லியுள்ளோம். அத்துடன் ஒரு புதிய தொழில்நுட்பம் எப்படி ஒரு கிராமத்தை மேன்படுத்துகிறது, அந்த கிராமம் எப்படி அந்த தொழில் நுட்பத்தை வர்வேற்கிறது என்ற கருத்தும் இப்படத்தில் இருக்கும்’’ என்றார்.

‘பலே வெள்ளையத் தேவா’ குறித்து சசிகுமார் பேசும்போது, ‘‘50 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிக்கலாம் என்பதை எனக்கு உணர்த்திய, எனக்கு பாடம் கற்பித்த படம் ‘பலே வெள்ளையத் தேவா’. இந்த படத்தை இயக்கியுள்ள சோலை பிரகாஷ் திட்டமிட்டபடி 50 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார்! அவரது திட்டமிடல், வேகம், விறுவிறுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தை பொறுத்தவரையில் நான் ஹீரோ இல்லை! கோவை சரளா அம்மா தான் ஹீரோ! அவர் இப்படத்தில் எற்று நடித்திருக்கும் செல்ஃபி காத்தாயி என்ற கதாபாத்திரம் ஜாலியாக இருக்கும். அவரது நடிப்பை பார்க்கும்போது நமக்கு மனோரமா ஆச்சியை தான் நினைவுக்கு வரும்’’ என்றார்.

‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்தை ‘வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ்’ தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

#BalleVellaiyaThevaa #Sasikumar #Dhanya #KovaiSarala #CompanyProduction #SolaiPrakash #DarbugaSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;