ரஜினி படத்திற்கு ‘நோ’ சொன்ன வடிவேலு!

ரஜினியின்  ‘லிங்கா’ உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களை தவிர்த்த வடிவேலு!

செய்திகள் 19-Dec-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி முதலானோர் நடித்து வரும் 23-ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் ‘கத்திசண்டை’. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது வடிவேலு பேசும்போது,

’’ஒரு இடைவேளைக்குப் பிறகு நான் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆவதாக சொல்கிறார்கள். ரீ-என்ட்ரி என்று சொல்லுவது தவறு! நான் நடித்துக்கொண்டு தான் இருந்தேன். கதையும் என் கேரக்டரும் சரியில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தவிர்த்திருக்கிறேன். அதில் ரஜினி சார் நடித்த ’லிங்கா’ படமும் ஒன்று! அதில் எனக்கு சொல்லப்பட கேரக்டர் ரொம்பவும் சிறிசு! அதனால் ‘லிங்கா’வுக்கு ‘நோ’ சொன்னேன். என்னை நம்பி வரும் ரசிகர்களை நாம் ஏமாற்றக்கூடாது அல்லவா? ‘கத்திசண்டை’யில் ஏன் நடித்தேன் என்றால் இயக்குனர் சுராஜ் தம்பி சொன்ன கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டது. அதனால் நடித்தேன். இது மாதிரி கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தேர்வு செய்து தொடர்ந்து நடிக்கவிருக்கிறேன். என் நடிப்பு தொழில்! அதிலிருந்து ஒருபோது விலகமாட்டேன். அடுத்து ஷங்கர் சார் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’யின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறேன்’’ என்றார் வடிவேலு.

#Vadivelu #Lingaa #Rajinikanth #Kaththisandai #Vishal #Tamannah #Suraaj #MadrasEntertainment #Soori

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;