‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து ‘கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். முருகானந்தம் இயக்கி வரும் இப்படத்தில் கேத்ரின் தெரெசா கதாநாயகியாக நடிக்கிறார். ‘கதாநாயகன்’ படத்தை தொடர்ந்து முருகானந்தம் இயக்கத்தில் மற்றுமொரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷ்ணுவிஷால் என்ற செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘கதாநாயகன்’ படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதனால் இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வும் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது என்றும், படத்தின் ஒன் லைனை கேட்ட ஹன்சிகாவுக்கு கதை பிடித்துவிட்டதால் அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சமீபத்தில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை தயாரித்த ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிபு விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது. ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘போகன்’. ‘ஜெயம்’ ரவி, அரவிந்த்சாமி முதலானோருடன் ஹன்சிகா நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
#Haniska #VishnuVishal #MaaveeranKittu #Kathanayagan #Muruganantham #Bogan #JayamRavi #ArvindSwamy
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்...