சந்தானத்திற்கு தக்க தருணத்தில் கை கொடுத்த சிம்பு!

சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக களமிறங்கும் சிம்பு!

செய்திகள் 19-Dec-2016 10:26 AM IST VRC கருத்துக்கள்

‘வி.டி.வி.புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாகவும், வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு முதலில் இசை அமைக்க அனிருத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசை அமைக்கவிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவரை நடிகராக, திரைக்கதை எழுத்தாளராக, பாடலாசிரியராக, பாடகராக வலம் வந்து கொண்டிருந்த சிம்பு இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் களம் இறங்குகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சந்தானத்தை தனது ‘மன்மதன்’ படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு தான்! ஆரம்ப காலத்திலிருந்து சிம்புவும், சந்தானமும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு தக்க இசை அமைப்பாளர் அமையாத சூழ்நிலையில் தன் நண்பருக்கு கை கொடுத்து உதவியியுள்ளார் சிம்பு!

#STR #Santhanam #SakkaPoduPoduRaja #VTVProduction #VTVGanesh #VaibhaviSandiliya #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;