‘பைரவா’வுடன் பொங்கல் ரிலீஸில் போட்டியிடும் 5 படங்கள்?

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து மேலும் 5 படங்கள் பொங்கல் ரிலீஸில் களமிறங்கவிருக்கிறதாம்

செய்திகள் 17-Dec-2016 10:57 AM IST Chandru கருத்துக்கள்

படப்பிடிப்பு துவங்கியபோதே பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்ற திட்டமிடலுடன்தான் பயணத்தைத் துவங்கியது விஜய்யின் ‘பைரவா’. திட்டமிட்டபடியே பொங்கலுக்கு ரிலீஸ் என்பதிலும் உறுதியாக இருக்கிறது. வரும் 23ஆம் தேதி ‘பைரவா’வின் பாடல்கள் வெளியாகவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு அன்று ‘பைரவா’வின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் வரை ‘பைரவா’வோடு ‘கத்தி சண்டை’ மட்டுமே பொங்கல் ரிலீஸில் இருந்தது. ஆனால், ‘சிங்கம் 3’யின் ரிலீஸ் தேதி மாறவும், ‘கத்தி சண்டை’ டிசம்பர் 23ஆம் தேதியே வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது பொங்கல் ரிலீஸை குறிவைத்து மேலும் 5 படங்கள் களத்தில் குதிக்கவிருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படம் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ தைப் பொங்கலுக்கு தைரியமா வர்றோம் என போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அருண் விஜய்யின் ‘குற்றம் 23’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, கலையரசனின் ‘அதே கண்கள்’ படமும் பொங்கல் ரேஸில் குதித்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#Bairavaa #Vijay #Kuttram23 #ArunVijay #BruceLee #GVPrakash #EnakkuVaithaAdimaikal #Yaakkai #Krishna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;