’ஒத்தைக்கு ஒத்த’ மோதத் தயாராகும் அதர்வா!

’செம போத ஆகாத’,  ‘இமைக்கா நொடிகள்’ படங்களை தொடர்ந்து அதர்வா நடிக்கும் படம் ஒத்தைக்கு ஒத்த!

செய்திகள் 17-Dec-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

’செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ முதலான படங்களில் நடித்து வரும் அதர்வா அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களில் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்குகிறார். ‘அரண்மனை’ படத்தை தயாரித்த ’விஷன் மீடியா’ நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். இப்படத்தில் அதர்வாவுடன் தியாகராஜன், ‘அஞ்சாதே’ புகழ் நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு ராமலிங்கம், இசைக்கு ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோருடன் கூட்டணி அமைத்துள்ள இயக்குனர் பர்னீஷ் படம் குறித்து பேசும்போது,

‘‘பிறர் யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்த காலில் நிறக் வேண்டும் என்பது தான் ஒரு மனிதனின் சிறப்பு என்பதை ஒரு மாணவன் உணரும் இடம் கல்லுரி. அத்தகைய மாணவர்களின் கல்லுரி வாழக்கை, காதல், இவர்களுக்குள் யார் வலியவன் என்பதில் ஏற்படும் சண்டைகள் தான் ’ஒத்தைக்கு ஒத்த’ படம். இந்த கதைக்கான கதாநாயகி நடிகை இன்னும் முடிவாகவில்லை. அவரை தேடி வருகிறோம்’’ என்றார்.

#Atharvaa #SemaBothaAagathey #OththaikkuOththa #ImaikkaNodigal #Burneesh #Ranjith #Narien #Thiagarajan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;