2016ஆம் ஆண்டின் கடைசி வெள்ளியில் களமிறங்கும் படங்கள்!

சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’, ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு’ படங்கள் இந்த வருடத்தின் கடைசி ரிலீஸாக களமிறங்குகின்றன

செய்திகள் 17-Dec-2016 10:25 AM IST Chandru கருத்துக்கள்

பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கிடையிலும் இந்த 2016ல் 200க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஒருவழியாக வருடத்தின் இறுதிக்கட்டத்தில் தற்போது தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதி விஷாலின் ‘கத்தி சண்டை’ படம் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2016ன் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 30ஆம் தேதி இரண்டு படங்கள் தற்போது தங்களின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருக்கின்றன.

மணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படம் டிசம்பர் 30ல் ரிலீஸாகிறது. வாஸ்து மீன் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காளி வெங்கட், யோகிபாபு, லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 30ல் ரிலீஸாகும் இன்னொரு படம் ரகுமான் நாயகனாக நடித்திருக்கும் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார்.

#Sibiraj #KattapavaKaanom #ManiSeyyon #DhruvangalPathinaaru #Rahman #AishwaryaRajesh #vishal #Kaththisandai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;