‘தாயம்’ த்ரில்லர் படத்தில் புதிய முயற்சி!

முழுக்க முழுக்க ஒரு அறைக்குள் படமான இந்தியாவின் முதல் த்ரில்லர் படம் தாயம்!

செய்திகள் 16-Dec-2016 3:34 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ள படம் ‘தாயம்’. இப்படத்தில் ‘கதை, திரைக்கதை வசனம் இயக்கம்’ படப்புகழ் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்திருக்க, ஐரா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், காதல் கண்ணன், அன்மோல் சந்து, ஆன்ஞல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.

17 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள ‘தாயம்’ குறித்து இயக்குனர் கண்ணன் ரங்கஸ்வாமி கூறும்போது, ‘‘ஒரு நேர்காணலுக்காக வரும் 8 பேர் ஒரு அறையில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு முகமூடி அணிந்த ஒருவர் வந்து அந்த 8 பேரையும் ஆட்டிப்படைக்கிறார். அந்த முகமூடி அணிந்த நபர் யார்? முகமூடி அணிந்த நபரிடமிருந்து அந்த 8 பேரும் தப்பித்தார்களா? என்பதை படு விறுவிறுப்பாக, த்ரில்லிங்காக சொல்லும் படமே ‘தாயம்’. 100 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு அறைக்குள் படமாக்கியுள்ளோம். ஒரு திரைப்படத்தை முழுக்க முழுக்க ஒரு அறைக்குள் படமாக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இந்த படத்தை ‘பியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். பாக்கியராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Dhaayam #KannanRangasamy #SanthoshPrathap #AiraAgarwal #Jayakumar #KadhalKannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்


;