சிவகார்த்திகேயன், விஜய், சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

‘சண்டைக்கோழி-2’வில் விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 16-Dec-2016 11:06 AM IST Murugan கருத்துக்கள்

இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் மீண்டும் இணையும் ’சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது கிடைத்த லேட்டஸ்ட் தகவலின் படி ’சண்டைக்கோழி-2’வில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதனை அவர் தரப்பினரே உறுதி செய்துள்ளனர். சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ மற்றும் விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக ’சண்டைக்கோழி-2’வில் விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். முதல் பாகத்தில் விஷாலுடன் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். மீரா ஜாஸ்மினை போன்று நம் பக்கத்துவீட்டு பெண் மாதிரி ஒரு முகம் சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திற்கும் தேவைப்படுவதால் கீர்த்தி சுரேஷ் அதற்கு பொருத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் விஷாலுடன் ராஜ்கிரணும் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார். இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


#KeerthySuresh #Vishal #YuvanSankarRaja #Rajkiran #Sandakozhi2 #Bairavaa #Vijay #Remo #Sivakarthikeyan #Suriya #ThaanaSernthaKootam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;