ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம்!

’எமன்’ படத்தை தொடர்ந்து ராதிகா சரத்குமார் தயாரிப்பில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி!

செய்திகள் 16-Dec-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

’சைத்தான்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ‘எமன்’. இந்த படத்தை தொடர்ந்து ராதிகா சரத்குமாரின் ’ராடான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி. இது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் 7-ஆவது படமாகும். 15 ஆண்டுகளுக்கு முன் விஜய் ஆண்டனியை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் ராதிகா சரத்குமார் ஆவார். பிறகு திரைப்படங்களுக்கு இசை அமைக்க துவங்கிய விஜய் ஆண்டனி, அதன் பிறகு நடிகராகவும் களம் இறங்கி பல வெற்றிப் படங்களை வழங்கினார். இப்போது தன்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. ‘எமன்’ பட வேலைகள் முடிந்ததும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் பட வேலைகளில் இறங்கவுள்ளார் விஜய் ஆண்டனி!

#VijayAntony #Saithan #Yeman #Pichaikkaran #RadhikaSarathkumar #RadaanPictures #Radhika #Naan #Salim

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;