‘பைரவா’வின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ ஆல்பத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

செய்திகள் 16-Dec-2016 9:36 AM IST Chandru கருத்துக்கள்

படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே தன் படத்தின் பாடல்களை வெளியிடுவதில் திட்டமிட்டு செயல்படுபவர் நடிகர் விஜய். இதேபோன்ற ஒரு திட்டமிடலில்தான் ‘பைரவா’ ஆடியோவுக்கும் நடந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருந்த ‘பைரவா’ பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘பைரவா’ பாடல்கள் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமுறையில் விழா வைத்து ‘பைரவா’ பாடல்களை வெளியிடாமல், நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தில் வழக்கம்போல் நடிகர் விஜய்யும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். ஆடியோ ரைட்ஸை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Bairavaa #Vijay #KeerthiSuresh #SanthoshNarayanan #Bharathan #LahariMusic #Pongal2017

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;