பொங்கல் ரேஸில் ஜி.வி.பிரகாஷின் சர்ப்ரைஸ் என்ட்ரி!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரூஸ் லீ’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதாக அறிவிப்பு

செய்திகள் 16-Dec-2016 9:36 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்துவரும் பல்வேறு புறச்சூழல்களால் படங்களின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் சூர்யாவின் ‘சிங்கம் 3’, ஜெயம் ரவியின் ‘போகன்’, விஷாலின் ‘கத்தி சண்டை’ உட்பட பல படங்கள் ரிலீஸ் தேதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘பைரவா’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இப்போது வரை அதை நோக்கியே ‘பைரவா’வும் திட்டமிட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

பைரவாவைத் தொடர்ந்து ‘கத்தி சண்டை’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ‘சிங்கம் 3’வின் ரிலீஸில் திடீர் மாற்றம் ஏற்படவே, ‘கத்தி சண்டை’ டிசம்பர் 23ஆம் தேதியே வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பைரவாவும், சிங்கம் 3யும் பொங்கல் ரேஸில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ் லீ’ திரைப்படம் பொங்கல் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ, பொங்கல் ரேஸில் பைரவாவுடன் நேரடியாக களத்தில் குதித்துள்ளது.
#Bairavaa #BruceLee #Vijay #S3 #Singam3 #Suriya #2017PongalRelease #GVPrakashKumar #KaththiSandai #Vishal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;