கடந்த 2009 ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைக்காகவும், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஹோ…’பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து ‘127 ஹவர்ஸ்’ என்ற படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் ‘பீலே: பர்த் ஆஃப் எ லெஜெண்ட்’ என்ற படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படம் பிரபல பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலேயின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!
’மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில்...
நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா...
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகவிருக்கிறது அட்லி இயக்கத்தில்...