தனுஷ் படத்தில் கஜோல் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷுடன் இணையும் பிரபுதேவா பட ஹீரோயின்!

செய்திகள் 15-Dec-2016 4:04 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனமும் கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸும்’ இணைந்து தயாரிக்கிறது. முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷும், கதாநாயகியாக நடித்த அமலா பாலும் இரண்டாவது பாகத்திலும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள் இவர்களுடன் விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, ரிஷிகேஷ் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்கிறார். ராஜீவ் மேனன் இயக்கிய ‘மின்சாரக்கனவு’ படத்தில் பிரபு தேவாவுடன் கதாநாயகியாக நடித்த கஜோல் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் ‘விஐபி-2’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஒளிப்பதிவை சமீர் தாஹிர் கவனிக்கிறார். ஷால் ரோல்டன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சத்யராஜ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை சதீஷ் குமார் மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது ‘விஐபி-2’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;