கதாநாயகனை தொடர்ந்து மீண்டும் அதே இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்!

’மீன் குழம்பும் மண் பானையும்’ பட நிறுவன தயாரிப்பில் இணையும் விஷ்ணு விஷால்!

செய்திகள் 15-Dec-2016 3:47 PM IST VRC கருத்துக்கள்

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது நடித்து வரும் படம் ‘கதாநாயகன்’. இந்த படத்தை முருகானந்தம் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடுக்கிறார். இந்த படம் முடிந்ததும் முருகானந்தம் இயக்கும் மற்றுமொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் விஷ்ணு விஷால்! இந்த படத்தை சமீபத்தில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை தயாரித்த துஷ்யந்த் ராம் குமாரின் ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. காளிதாஸ் ஜெயராம் நடித்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலை வைத்து ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;